2021 செப்டம்பர் ௦6

கௌரவ டலஸ் அழகப்பெரும

மாண்புமிகு வெகுசன ஊடக அமைச்சர்,

இல. 163, அசிதிசி மெந்துர,

கிருளப்பனை மாவத்தை,

பொல்ஹேன்கொட,

கொழும்பு 05.

கௌரவ (பேராசிரியர்) ஜீ.எல். பீரிஸ்

மாண்புமிகு வெளிநாட்டு அமைச்சர்,

வெளிநாட்டு அமைச்சு

குடியரசுக் கட்டிடம்

சேர் பாரொன் ஜயதிலக்க மாவத்தை

கொழும்பு 01

இலங்கை

கௌரவ அமைச்சர் அவர்களுக்கு,

தஞ்சம் கோரும் ஆப்கான் ஊடகவியலாளர்களுக்கு  உதவிக்கரம் நீட்டுதல்.

இலங்கையில் உள்ள ஊடக அமைப்புகளின் கூட்டமைப்பு என்ற வகையில், இந்த இக்கட்டான  தருணத்தில் சக ஆப்கானிஸ்தான் ஊடகவியலாளர்கள் எதிர்கொள்ளும் பாரதூரமானதும்  மற்றும் அபாயகரமானதுமான சூழ்நிலை தொடர்பில் தமது அவதானத்தைச் செலுத்துகின்றமை குறிப்பிடத்தக்கதாகும். அவர்களில் பலருக்கு  தலிபான் ஆட்சியின் கீழ்  பெரும் உயிர்  ஆபத்து காணப்படுகின்றது. இந்த விடயம் தொடர்பில் நீங்கள் அறிந்திருப்பீர்கள் என்று நம்புகிறோம்.

தற்போது உலகளாவிய பல நாடுகளில்  மனிதநேயமிகு பொறுப்புமிக்க நடவடிக்கையாகவும் மற்றும் ஜனநாயக ரீதியான தமது அர்ப்பணிப்பை தெரிவிக்கும் முகமாகவும்

ஆப்கானிஸ்தானின் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ள ஊடகவியலாளர்கள் தங்கள் உயிர்களைக் காப்பாற்றுவதற்காக தங்கள் சொந்த நாடுகளில் தஞ்சம் கோருவதற்கான வாய்ப்பை பல நாடுகள் இப்போது வழங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

பல வருடங்களாகப் புகலிடக் கோரிக்கையாவார்களுக்கு இலங்கை நாடும்  நுழைவுக்கான அனுமதி மற்றும் பாதுகாப்பை வழங்கியுள்ளது. அதன்படி, கடந்த காலங்களில்  தஞ்சம் அடைந்த உலகில் கிட்டத்தட்ட 80 மில்லியன் மக்களில், 170 ஆப்கானியர்கள் உட்பட 1300 பேர் இலங்கை அரசினதும் மற்றும் இலங்கை மக்களினதும் பாதுகாப்பைப் பெற்றுள்ளனர் என்பதை நாங்கள் நன்றி உணர்வுடன் நினைவுகூர்ந்து கொள்கின்றோம். 2005 இல் அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் உயர் ஆணையத்துடன்  United Nations High Commissioner for Refugees (UNHCR) அரசாங்கம் கையெழுத்திட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் மற்றும் 2006 இல் ஒப்புக்கொள்ளப்பட்ட பரிந்துரை வழிகாட்டுதல்கள் (ToR) ஆகியவற்றின் காரணமாக இலங்கை இந்த மைல்கல்லை எட்டியுள்ளமை கவனிக்கத்தக்கதாகும். மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாகத் தலைமை வகித்த காலத்தில் இந்த உடன்பாடுகள் எட்டப்பட்டன. அதன்படி, இலங்கை அரசாங்கம் ஏற்கனவே அகதிகளைக் கையாள்வதற்கான நடைமுறை கட்டமைப்பையும் தொலைநோக்கு பார்வையையும் கொண்டுள்ளமை வரவேற்கத்தக்கதாகும்.

இந்தச் சந்தர்ப்பத்தில், காட்டுமிராண்டித்தனத்திற்குப் பலியாகி, தங்கள் உயிரைக் கொடுக்க வேண்டிய பெண் ஊடகவியலாளர்கள் உட்படப் பல ஊடகத்துறை வல்லுநர்கள் பாதுகாப்பு தேடி நாட்டை விட்டு வெளியேறத் தயாராகி வருகின்றனர். அதன்படி, பிராந்தியத்தில் உள்ள மற்ற நாடுகளுடன் இணைந்து அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் உயர் ஆணையத்துடனான  ஒப்பந்தத்தின் படி செயல்பட இலங்கைக்குச்  சிறந்ததொரு முன்மாதிரியான  வாய்ப்பு உள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். நாட்டிற்குச் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும்போது வெளிநாட்டுச் சுற்றுலா குழுக்கள் மற்றும் விளையாட்டு அணிகள் பின்பற்றும் சுகாதார மற்றும் தனிமைப்படுத்தல் முறைகளைப் பயன்படுத்தி இந்த நடவடிக்கையை மேற்கொள்வதற்கான வாய்ப்பு உள்ளது.

சர்வதேச பத்திரிகையாளர் கூட்டமைப்புடன் இணைந்த தெற்காசிய ஊடக ஒத்துழைப்பு வலையமைப்பு  (SAMSN) சார்க் நாடுகளின் தலையீட்டைக் கோரி ஒரு அறிக்கையையும் வெளியிட்டுள்ளது.

(அறிவிக்கை இணைக்கப்பட்டுள்ளது.)

இது தெற்காசியப் பிராந்திய ஒத்துழைப்பை நிரூபிக்கவும்  மேலும்  நமது நாடு மனித உரிமைகள் மற்றும் அகதிகளிற்கு உதவிக்கரம் அளித்தல் தொடர்பில் உறுதியாக உள்ளது என்பதையும்  சர்வதேச  சமூகத்திற்குக் காட்ட ஒரு சிறந்த வாய்ப்பாகும். இது தொடர்பாக இலங்கை அரசு சாதகமாகப் பதிலளிக்கும் என்று நம்பிக்கை தெரிவிக்கும் ஊடக அமைப்புகளின் கூட்டமைப்பு, இதுகுறித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படுமாயின், இலங்கை அரசுக்கு எங்கள் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்ளுவதுடன், மேலும் இது தொடர்பில்  இலங்கையில் உள்ள ஊடக அமைப்புகள் என்ற வகையில் தமது மனப்பூர்வமான முழு ஆதரவையும் வழங்க எதிர்பார்க்கின்றோம்.

இப்படிக்கு,

ஊடக அமைப்புகளின் கூட்டமைப்பு

 

தர்மசிறி லங்காபேலி,

செயலாளர்,

ஊடக தொழிலாளர் தொழிற்சங்க சம்மேளனம்

 

 

சீதா ரஞ்சனி,

அழைப்பாளர் ,

சுதந்திர ஊடக இயக்கம்

துமிந்த சம்பத்,

தலைவர்,

இலங்கை உழைக்கும்  பத்திரிகையாளர்கள் சங்கம்

 
என்.எம் அமீன்,

தலைவர்,

ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம்

 
கணபதிப்பிள்ளை சர்வானந்த,

செயலாளர்,

இலங்கை தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம்

 
இந்துநில் உஸ்கொட ஆரச்சி

செயலாளர்,

இலங்கை இளம் பத்திரிகையாளர்கள் சங்கம்.